எலும்புகள், பற்கள் போன்ற பல்வேறு உறுப்புகளுக்கு கால்சியம் மிக அவசியம் இது பாலில் மட்டுமல்ல சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் அதிகமாக உள்ளது. அதேபோல் ராகி, சூரியகாந்தி விதைகள், முருங்கைக்கீரை, அத்திப்பழம், பாதாம், மீன், முட்டையிலும் அதிகமாக காணப்படுகிறது. தயிர், எள், சோயா பீன்ஸ், கொள்ளு ஆகியவையும் கால்சியம் சத்திற்கு சிறந்த உணவுகள் ஆகும். அசைவப் பிரியர்கள் நண்டு எடுத்துக் கொள்ளலாம். இது கால்சியம் மற்றும் புரதத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.