திருச்சியில் வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

68பார்த்தது
திருச்சியில் வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் டி.எம்.ஆர். ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் மே 5-ஆம் தேதி நடக்கும் வணிகர் தின மாநில மாநாடு குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். 

கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ஆம் தேதி 42-வது வணிகர் தினம் வணிகர் அதிகார பிரகடன மாநாடாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் அனைவரும் அணி, அணியாக, கடல் அலை போல் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி