துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உத்திராபதி செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாண்புமிகு நீதிபதிகள் ஜெய்சங்கர் சத்தியமூர்த்தி நர்மதா ராணி ஆகியோர் பார்வையிட்டனர். இம்முகாமில் கண் பரிசோதனை ரத்த அழுத்தம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.