நடிகை கஸ்தூரிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப்புரத்து சேவகர்கள் என்று ஒரு பெண்ணே, பெண் இனத்தை கேவலமாக சித்தரித்துள்ளதாகவும், திமுக அரசுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்த திட்டம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 'பிராமணர் அல்லாதோர் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்கள்' என கஸ்தூரி பேசியதற்கும் கண்டனம் தெரிவித்த அவர், ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.