துறையூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்ப பேரணி

74பார்த்தது
துறையூர் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்ப பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியானது துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் தொடங்கி பெரிய கடைவீதி பாலக்கரை பேருந்து நிலையம் வழியாக முசிறி பிரிவு சாலை ரவுண்டானா வரை நடைபெற்றது.

 இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றியவாறு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வாசித்தபடியும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடியும் பேரணியாக சென்றனர். 

போதைப் பொருள் இல்லாத நாடு அமைதியான நாடு, போதையின் பாதை அழிவின் பாதை, போதைப்பொருள் ஒழிப்போம் மக்கள் நலம் காப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடியும் சிலம்பம் சுற்றியபடியும் மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி