ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சியில்தான் உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் பள்ளிகளில் அறிவியல் செய்முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. மதிப்பெண் சார்ந்து தான் கற்பித்தல் நடைபெறுகிறது. வினாக்களுக்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்ற ரீதியில் அறிவியல் கற்பிக்கப்படுகிறது. அறிவியலை மனப்பாடம் செய்வதும் அதைத் தேர்வில் எழுதுவதும் அறிவியலை வளர்க்கப் பயன்படாது. எனவே அறிவியலை ஆராய்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.