அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த முதலமைச்சர்

52பார்த்தது
அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த முதலமைச்சர்
அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 01) தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு மாலை அணிவித்து  வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி