தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக தனித்து போட்டியிடும் என முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். "விஜயுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் கொண்டுள்ளது, தவெக தனித்து களம் காண வேண்டும் என்பதே விஜயின் வியூகம், தனித்து போட்டியிட்டே மாநிலத்தில் அவர் ஆட்சி அமைப்பார் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.