சீனாவைச் சேர்ந்த லீ என்பவர் ஓட்டிச் சென்ற கார், சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அப்பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அப்பெண்ணை, விபத்தை ஏற்படுத்திய லீ என்பவர், தினமும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.