துறையூர் அருகே உள்ள நல்லவனிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். சம்பவம் நடந்த நேற்று(அக்.10) துறையூர் திருச்சி சாலையில் உள்ள கரட்டாம்பட்டி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு முகம் மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து காயம் அடைந்த கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கரட்டாம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மீது வழக்குப்பதிந்து புலிவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.