தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி 4பேர் கைது.

60பார்த்தது
தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி 4பேர் கைது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 24 ). லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித்துறை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது 4 வாலிபர்கள் அவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கத்தி முனையில் அவரது சட்டை பையில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்து 800 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து உடனடியாக பரமேஸ்வரன் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி தென்னூர் காளி கோவில் சந்து புது மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சூசை ராஜ் (34), திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்கிற போலீசேக்கு (38), திருச்சி தொகுப்பு பகுதியைச் சேர்ந்த யாசர் அரபத் (28) ஸ்ரீரங்கம் சோதனை சாவடி புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் ராஜா என்கிற வெள்ளை ராஜா ( 42 ) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, ரூபாய் 5 ஆயிரத்து 800 பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இதில் அப்துல் அஜீஸ் ராஜா ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி