கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது 1கிலோ கஞ்சா பறிமுதல்.

57பார்த்தது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது 1கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் உறையூர் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில், தில்லை நகரை சேர்ந்த இம்ரான்(வயத 23), சசி என்கிற சசிகுமார்(22) சரவணகுமார் (18) ஆகிய மூவரும் வெளிமாநிலங்களில் இருந்து
கஞ்சாவை வாங்கி வந்து 80 அடி ரோடு பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 1. 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி