திருச்சி தெற்கு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
திருச்சி தெற்கு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலோடு, மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் அவர்களின் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பகுதி செயலாளர் மோகன் நன்றியுரை ஆற்றினார். பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி