நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமான படம் பரோஸ். இப்படத்தில் மோகன்லால் குறு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா படமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 22-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக உள்ளது.