விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகம் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் முழுத் தொகையையும் வழங்கிய பின்னரே ஆலை நிர்வாகம் அரவையைத் தொடங்க வேண்டும் என்றும் முத்தரப்புக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.