இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிங்குவும் பிரியாவும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாக பிரியாவின் தந்தையும் உத்தரப்பிரதேசத்தின் கெராகத் தொகுதி எம்எல்ஏவுமான துஃபானி சரோஜ் கூறியுள்ளார்.