தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா நேற்று (பிப்., 21) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோயில் சேர்தல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழாவான வருகின்ற மார்ச் 2ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.