திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

534பார்த்தது
திருச்சியில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி 02. 01. 2024 அன்று திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு 01. 01. 2024 அன்று இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி. வி. எஸ். டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். பேருந்துகள் 02. 01. 2024 அன்று காலை 07. 00 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி. வி. எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி