திருவானைக்காவலில் இன்று பங்குனி தேரோட்டம்

76பார்த்தது
திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழா வெகு விமர்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டில் கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பங்குனி தேரோட்டத்திற்காக கடந்த 25-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு துவங்கியது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரரு‌டன் 2 சிறிய தேர்கள் புறப்பட்டு தேரோட்டம் கண்டருளுகின்றன. அதன் பின்னர் முதலாவதாக சுவாமி திருத்தேர் புறப்பாடும், இரண்டாவதாக அம்மன் தேர் புறப்பாடும் நடைபெறவுள்ளது. சுவாமி திருத்தேர் நிலையிலிருந்து புறப்பட்டு தெற்கு ரத மூலையில் நிறுத்தப்படும். 

அதன் பின்னர் அம்மன் திருத்தேர் இழுக்கப்பட்டு சுவாமி தேரின் பின்புறம் நிறுத்தப்படும். பின்னர் மீண்டும் சுவாமி திருத்தேரை இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். இதைப் போல் அம்மன் தேரும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும். தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் 'சிவ, சிவ, ஓம் சக்தி' என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி