பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல. ஆனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. வீரியம் குறைவான கொரோனாதான் பரவுகிறது என்பது ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.