விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சிவகாசி அருகேவுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூர், குமிளங்குளம், சுக்கிரவார்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்து பயிரடப்பட்ட பருத்திகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.