நீங்கள் உங்களையே விற்றுவிட்டீர்கள் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள் எங்களுக்குப் போதித்திட எந்த உரிமையும் இல்லை. உங்கள் டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.