பெங்களூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த RCB அணியின் IPL டிராபி வெற்றிகொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டதால், வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், RCB அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசல், DNA மார்க்கெட்டிங் நிறுவனத்தின் பணியாளர்கள் கிரண் குமார், சுனில் மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளனர்.