திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சடலம் மாற்றி அனுப்பப்பட்ட விவகாரத்தில், பணியில் இருந்த மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருத்தணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை, வேறொருவரின் சடலத்திற்குப் பதிலாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.