நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைதானவர்கள் ஜாமின் கோரி ஆந்திர ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையில், நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாததால் போலே பாபா நிறுவனம் ஏ.ஆர்.டெயரி பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளனர் என்று சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.