பொறியியல் மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு

55பார்த்தது
பொறியியல் மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பதிவு இன்றுடன் (ஜூன்.06) நிறைவடைகிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "விண்ணப்பப்பதிவு மே.07 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் 01.00 மணி வரை 2,98,425 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் மொத்தம் 2,44,168 மாணவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி