முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, “தொகுதி மறுவரையறை குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய பல்லவியையே பாடி இருக்கிறார். 2027ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சொல்லக்கூட தைரியம் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்குத் தான் பயம் என்றால், சொல்வதற்கு கூடவா பயம்?” என விமர்சித்துள்ளார்.