இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் பெய்த மழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மறு தேர்வுக்கு கோரினர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 22 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வை மீண்டும் வைத்தால் தீவிர தாக்கம் ஏற்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.