திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த மண் சுமந்த லீலை வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தையொட்டி சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி சந்திரசேகரா், வந்தி பிராட்டியாா், ஹரிவா்த்தன பாண்டியனுடனும் பல்லக்கில் ஆனந்தவல்லி தாயாருடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு உற்ஸவ மண்டபத்திலிருந்து கயிலாய வாத்தியத்துடன் புறப்பட்டு மேல விபூதி பிரகாரம் வழியாகச் சென்று திருமஞ்சன காவிரியை அடைந்தனா்.
அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆற்றிலிருந்து வெள்ளி மம்பட்டியால் மண் அள்ளப்பட்டு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. அதன் பின்னா் மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.