திருச்சி கலையரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, விளையாட்டு உபகரணங்களை வழங்கி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
இந்தஸநிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார் இ. ஆ. ப. , அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. வே. சரவணன் இ. ஆ. ப. , அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.
இதில் கழக நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.