நத்தர்ஷா தர்காவில் வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆய்வு

581பார்த்தது
வக்பு வாரியத்தின் கீழ் ஏராளமான தர்காக்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அந்தந்த பகுதியில் தலைமை அறங்காவலர் மற்றும் செயல் அறங்காவலர்கள் குழு மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் ஆங்காவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதில் முகமதுகெளஸ் என்பவர் தலைமை அறங்காவலராக செயல்பட்டு வருகிறார். திருச்சி பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் தவறான முறையில் கையாளப்படுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக வக்பு வாரி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து இன்று வாரியத்தின் உறுப்பினர்களான மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல்சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மற்றும் நசீர்அகமது கொண்ட குழுவினர் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகார் கொடுத்தவர்கள் நேரில் வந்து தங்களது புகாருக்கான விளக்கம் அளித்தனர். அவர்களிடம் வாரிய உறுப்பினர்கள் விளக்கங்களை கேட்டு அறிந்தனர். மேலும் தர்காவின் செயல்பாடுகளை குறித்தும் அறங்காவலர் குழுவினுடன் கேட்டு அறிந்தனர்.

தொடர்புடைய செய்தி