பேட்ட,
மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு சமீபத்தில் விமானத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ ஊழியர்கள் தன்னிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், சேவை சரியாக இல்லை என்றும் அவர் X தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த 'இண்டிகோ'.. 'மேடம்.. இந்த சம்பவம் குறித்து அறிந்து வருந்துகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தியபின் உங்களைத் தொடர்புகொள்கிறோம்' என கூறியுள்ளது.