விஜயகாந்த்திற்கு 'கேப்டன் மில்லர்' படக்குழு அஞ்சலி

570பார்த்தது
விஜயகாந்த்திற்கு 'கேப்டன் மில்லர்' படக்குழு அஞ்சலி
கேப்டன் மில்லர் Pre Release Event நிகழ்ச்சியில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு படக்குழுவினர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், தனது 2 மகன்களுடன் பங்கேற்றார். கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12ம் தேதி வெளியாகிறது.