மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M. A. முகமது ராஜா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை நிர்வாக குழுவில் நடைபெற்ற ஆலோசனை குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது தலைமையின் அறிவுறுத்தலின்படி மாவட்ட பொது குழு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்: 1 கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகளில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து முஸ்லிம் வாக்காளர்களை கணக்கெடுப்பது.
தீர்மானம்: 2
ஏற்கனவே உள்ள கொடிக்கம்பங்களை புதுப்பித்து கட்சி மற்றும் கழக கொடிகளை ஏற்றுவது
தீர்மானம்: 3 முஸ்லிம் வாக்காளராக அதிகம் உள்ள வார்டுகளை தேர்வு செய்து அந்த வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சியினை வலுப்படுத்துவது
தீமானம்: 4 தமுமுக தொடங்கி முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமுமுகவில் அதிகமான உறுப்பினர் சேர்க்கை கிளைகள் தோறும் நடத்துவது நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உறுப்பினராகவும் இணைப்பது.
மேலும்இந்நிகழ்வில் மாவட்ட துணை, அணி, பகுதி, கிளை தலைவர், மமக செயலாளர் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.