தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகடன் உதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். கடனுதவி பெற https://exwel.schemes.com என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 221011 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.