அரசு மருத்துவமனை டீன் செய்தியாளர் சந்திப்பு

55பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிகமான வெப்ப அலைகள் பொதுமக்களை வாட்டி கொண்டிருக்கிறது. இதனால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. வியர்வை அதிகமாக வெளியேறுவதால் உடலில் அசதி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, இருதய பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உடலில் பருத்தி ஆடைகள் அணிந்து கொள்ளலாம். கருப்பு நிற துணிகள் வெப்ப அலைகளை அதிகமாக ஈர்த்து கொள்வதால் நமது உடலில் அதிகமான வெப்பம் உண்டாகும், அதனால் வெள்ளை நிற துணிகளை அணிவது நல்லது. முழுக்கை சட்டை
அணிய வேண்டும்.

இதன் மூலம் தாகத்தை தீர்த்து கொள்வது மட்டுமல்லாமல், உடலில் இருந்து ஏற்படக்கூடிய உப்பு சத்து மற்றும் மற்ற குறைபாடுகள் அனைத்தையும் குறைத்து கொள்ளலாம். வியர்வை அதிகமாகும் பொழுது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவு குறையும்.

இதனால் மயக்கம் நிலை ஏற்படலாம்.
இதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்களை கடைபிடித்தால் போதுமானது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்தால் கண்டிப்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக ஏற்படும். அதற்கு பதிலாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நிழலில் ஓய்வெடுத்து விட்டு வேலை செய்வது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி