கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

84பார்த்தது
கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த 6-ஆம் தேதி இருதரப்பினரிடையேயான மோதலில் நெப்போலியன், கதிரவன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். இவா்களை கொலை செய்ததாக ஸ்ரீரங்கம் மேலத்தெருவைச் சோ்ந்த க. விக்னேஷ் (35), வடக்குத் தெருவைச் சோ்ந்த பி. ரஞ்சித் (28) உள்ளிட்ட 11 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், ரஞ்சித் மற்றும் விக்னேஷின் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

தொடர்புடைய செய்தி