துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அங்குள்ள டிடி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று(செப்.25) பணிபுரிந்து வீடு திரும்புகையில் தனது சட்டை பையில் 9 சில்வர் ஸ்டீல் ராடுகளை மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. செக்யூரிட்டி சோதனை செய்தபோது புகழேந்தி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பெனி மேலாளர் செந்தில்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் மூலப்பொருட்களை திருடிய புகழேந்தியை துவாக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.