அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். விமானத்தில் இவரின் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. மேலும், நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த இருக்கை அமைந்துள்ளது. சீட் பெல்ட் அணியாத இவர், விமானம் தரைக்கு அருகே வந்து மோதும் போது சுதாரித்தப்படி பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு தப்பியுள்ளார்.