அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று (ஜூன். 12) பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பயணிகள் பயணித்துள்ளனர். அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானத்தில் 11 ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர்பிழைத்துள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.