குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் விபத்திற்குள்ளானதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, விமானம் கடந்த 2016ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டதாகவும், அதனால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமானத்தை மீண்டும் இயக்க அனுமதி கொடுத்தது யார்? விமான கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.