பெரிய அளவிலான UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு அரசு MDR கட்டணத்தை வசூல் செய்யத் திட்டமிட்டு வருவதாக ஆன்லைனில் பல்வேறு அறிக்கைகள் வெளியானது. இந்நிலையில் நிதி அமைச்சகம், “இந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்ற ஊகங்கள். இது மாதிரியான அடிப்படையற்ற ஊகங்கள் மக்களிடையே பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. UPI மூலமாக டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பதில் அரசு முழு ஈடுபாடோடு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.