குஜராத்: அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் அரசு மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. விபத்தில் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். இதனிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடக்கம் என தெரியவந்துள்ளது. பிரதிக் ஜோஷி (45), கோமி வியாஸ் (40) மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.