ஆனைக்கல்பட்டி பள்ளி சமையலறையில் தீ எம் எல் ஏ ஆய்வு

65பார்த்தது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைக்கல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 37 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இன்று சமையலர் ரேவதி பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு சமையல் செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டரின் டியூபில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. ரேவதி சத்தம் போட்டதால் அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து சிலிண்டர் டியூபில் பற்றிய தீயை ஈர சணல் சாக்குமூலம் அணைத்து சிலிண்டரை வெளியில் தூக்கி எறிந்தனர். இதில்சமையலறையில் இருந்த அரிசி மூட்டை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் அமர வைக்கபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தொகுதி
எம். எல். ஏ காடுவெட்டி தியாகராஜன் பள்ளிக்கு சென்று சமையலறை கூடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு செய்தார். பின்னர் சிலிண்டர், அடுப்பு தேவையான உபகரண பொருட்களை உடனடியாக வழங்கிட கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி