முசிறி அருகே கடுமையான வயிற்று வலியால் பால்காரர் தற்கொலை

63பார்த்தது
முசிறி அருகே கடுமையான வயிற்று வலியால் பால்காரர் தற்கொலை
முசிறி அருகே உள்ள தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் வயது 53 பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்தும் வயிற்று வலி குணமாகாததால் வேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தா. பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி