திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜாமணி (வயது 65). சம்பவம் நடந்த நேற்று முன்தினம் வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பிடித்து அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. 30 சதவீத காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.