மகா காளியம்மன் கோவிலில் திருஷ்டி துர்கா தேவி அலங்காரம்

85பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் சாலையில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அண்மையில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இன்று மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மகாகாளியம்மனுக்கு காலையில் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மலர அலங்காரம் செய்யப்பட்டு மகாகாளியம்மன் திருஷ்டி துர்கா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி