திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே வீராகோவில்பட்டியை சேர்ந்த ராஜசேகர் (32). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனதால் விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகி இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த வளநாடு போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.