தமிழக அரசு 2017-ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தது. நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதித்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. தற்போது வரை எந்த நிகழ்வுகளுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படுவதில்லை. இனி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் நடத்தப்படும் இசைக்கச்சேரிகள், நாடகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு கேளிக்கை வரி வசூலிக்கப்படும்.