திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற மலைக் கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றம் மற்றும் திருத்தணி கோயிலிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.